அமைச்சர்களை பதவி விலகுமாறு சி.வி உத்தரவு

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இரவரையும் பதவி விலகுமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உத்தரவிட்டுள்ளார்.

நாளை (வியாழக்கிழமை 15) மதிய வேளைக்குள், அவ்விருவரம் தாமாக முன்வந்து இராஜினாமாக் கடிதங்களைத் தன்னிடம் கையளிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வியமைச்சர் த.குருகுலராசா ஆகிய இருவர் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதான விவாதம்,  வடமாகாண சபையின் விசேட அமர்வாக, இன்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்று வருகின்றது. இதன்போதே, முதலமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.