அமைச்சர்களின் பொறுப்பை கவனத்திற்கொண்டு வர்த்தமானி – முழு விபரம் உள்ளே…

நிதி, ஊடகம், வெளிவிவகாரம், காணி, நாடாளுமன்ற சீரமைப்பு, அரசாங்க தகவல் உள்ளிட்ட துறை சார்ந்த அமைச்சுக்களின் பொறுப்புகள் மற்றும் விடயங்கள் அடங்கிய 2022 /34 இலக்க அரசின் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

விபரங்கள் வருமாறு :

இதனடிப்படையில், வெளிவிவகார அமைச்சின் கீழ், வெளிநாட்டு தூதரக குழு, தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை உட்பட்ட 5 நிறுவனங்கள் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தகது.

நிதி மற்றும் ஊடகம் : திறைசேறி, இலங்கை சுங்கம், மதுவரி திணைக்களம், நிதி, தகவல் திணைக்களங்கள், பத்திரிகை பேரவை உள்ளிட்ட 33 நிறுவனங்கள்.

எவ்வாறாயினும் முன்னர் ஊடகத்துறை அமைச்சின் கீழ் இருந்த தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனம், பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

காணி அமைச்சு : காணி சீர்திருத்த ஆணைக்குழு, காணி அளவை சபை, கந்தளாய் சீனி தொழிற்சாலையுடன் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி பிணக்கு தீர்ப்பு திணைக்களம், உள்ளிட்ட 8 நிறுவனங்கள் உள்ளடக்கம்.

அபிவிருத்தி பணி பொறுப்பு அமைச்சு சார்ந்த நிறுவனங்கள் – ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் உட்பட்ட 3 நிறுவனங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]