அமைச்சரினால் ஆபத்து- கலப்பு திருமண ஜோடி வெளியிட்ட வீடியோ!

இந்தியாவில் கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியால் இருவரின் உயிருக்கும் ஆபத்து என வெளியிட்டுள்ளனர்.

ஓசூர் அடுத்த B.தாசரப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் பவித்ரா மற்றும் ஆனந்தன். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க கடந்த மாதம் 31ம் திகதி நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் இவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில், இருவரும் வெளியேறியதிலிருந்து ஆனந்தன் நண்பர்களை, பவித்ராவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் வைத்து தாக்கி வருவதாகவும், இதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உடந்தையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் தங்கள் இருவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நாகராஜ் என்பவரும், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியுமே காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]