அமைச்சரவை மாற்றம் இன்று இல்லை?

அமைச்சரவை மாற்றமானது இன்று சில நாட்களுக்கு பிற்போடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முள்னதாக, இன்றைய தினம் அமைச்சரவை மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இன்றைய தினம் அமைச்சரவை மாற்றம் எதுவும் இடம்பெறாதென ஜனாதிபதி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே அமைச்சரவை சீர்த்திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுக்கு இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கடந்தவாரம் இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]