அமைச்சரவை மாற்றங்களை மஹிந்த மறந்தமை புதுமையான விடயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சி காலத்திலும் அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றமை அவருக்கு மறந்துபோயுள்ளமை புதுமையான விடயம் என, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவ்வாறான மாற்றங்களை முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.