அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதவி : எஸ்.பிக்கும், தயாசிரிக்குமிடையே போட்டி

அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு தயாசிறி ஜயசேகர மற்றும் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கிடையில கடும் போட்டி நிலவிவரிக்கிறது.

தேசிய அரசின் அமைச்சரவைப் பேச்சாளராக ஆரம்பத்தில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டிருந்தார் . அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளராக இருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக்கவையும் உள்வாங்கும் வகையில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதவி உருவாக்கப்பட்டது.

இதையடுத்து ராஜித்தவும், கயந்தவும் அமைச்சரவை இணைப்பேச்சாளர்களாகவே செயற்பட்டுவந்தனர்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பை அமைச்சர் கயந்தவும், கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை ராஜித்தவும் நிறைவேற்றிவந்தனர்.

இந்நிலையில், தொழிற்சங்கங்களின்போராட்டங்களின்போது அத்தியாவசிய சேவைகள் முடங்காமல் இருக்கும் வகையில் அதை முன்னெடுப்பதற்காக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தலைமையில் விசேட செயலணி அமைக்கும் விவகாரத்தால் ராஜித்தவுக்கும், சு.க. அமைச்சர்களுக்கிடையிலே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, ஜனாதிபதியை சந்திக்க சு.க.வின் சிரேஸ்ட அமைச்சர்கள், தமது கட்சியின் சார்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இதன்பிரகாரமே சு.வின் சார்பிலும் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளராகச் செயற்பட்ட அமைச்சர் அநுரபிரியதர்ஸன யாப்பாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு அவர் பச்சைக்கொடி காட்டவில்லை. இதையடுத்தே அதை பெற்றுக்கொள்வதற்கு எஸ்.பிக்கும், தயாசிரிக்குமிடையே போட்டிநிலவுவதாக அறியமுடிகின்றது.
எதுஎப்படியோ இவ்வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருவர் நியமிக்கப்படுவார்.
புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் புதியவர் பங்கேற்பார் என்றும் தெரியவருகின்றது. தனது தரப்பு பேச்சாளர் விவரத்தை இன்று அல்லது நாளை சுதந்திரக்கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]