அமெரிக்க பொருளாதார தடைகள் எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரதமர்

அமெரிக்க பொருளாதார தடைகள் எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரதமர்

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பனிப்போரும் எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்

அதேநேரத்தில் பொருளாதார தடைகளின் எதிரொலியாக எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இவ்வாறான தாக்கங்களை கட்டுப்படுத்தவே எரிபொருள் விலை சூத்திரமொன்றை ஏற்படுத்த அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]