அமெரிக்க பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவர்கள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா பகுதியின் ப்ரோவாா்ட்கவுண்டி பள்ளியில் திடீரென பயங்கர சப்தம் கேட்டுள்ளது.

அதனையடுத்து, அது துப்பாக்கி சத்தம் என்று உணர்ந்ததும் மாணவர்கள் பள்ளியை விட்டு உடனடியாக வெளியேறியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு சத்தம் நீண்ட நேரம் கேட்டதையடுத்து,அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்கத் தொடங்கினர்.

இருப்பினும் மாணவர்கள் உள்பட 17 பேர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 பேர் காயடைந்துள்ளனர்.

மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியது அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவார்தான் என்பதும், அவருக்கு 18 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]