அமெரிக்க பகிரங்க டென்னிஸ் : வீனஸ் – ஷரபோவா இரண்டாம் சுற்றில்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் : வீனஸ் – ஷரபோவா இரண்டாம் சுற்றில்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.அமெரிக்க பகிரங்க டென்னிஸ்

7 தடவைகள் க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள வீனஸ் வில்லியம்ஸ், தரப்படுத்தலில் 135ம் இடத்தில் உள்ள விக்டோரியா குஸ்மோவை எதிர்த்து போட்டியிட்டார்.அமெரிக்க பகிரங்க டென்னிஸ்

எனினும், குறித்த ஆட்டத்தில் கடும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைமை வீனஸ் வில்லியம்ஸுக்கு ஏற்பட்டது.

கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் 6 க்கு 3, 3 க்கு 6 மற்றும்  6 க்கு2 என்ற கணக்கில் வீனஸ் வெற்றிப் பெற்றார்.

இதேவேளை, ஊக்கமருற்து பாவனை குற்றச்சாட்டில் 15 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த ரஷ;யாவின் மரியா ஷரபோவாவும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முதல்சுற்றுப் போட்டியில் இரண்டாம் நிலை வீரர் சிமோனா ஹலேப்பை எதிர்த்தாடிய அவர்,  6 க்கு 4, 4 க்கு 6 மற்றும் 6 க்கு 3 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளார்.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]