அமெரிக்க நிபுணர்களுடன் இலங்கை வந்த விமானம்

அமெரிக்காவின் நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது.

இலங்கையின் மேலடுக்கு வளிமண்டலம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே, நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்ட அமெரிக்க விமானப்படையின் சி.- 130 விமானத்தில் இந்த நிபுணர்கள் நேற்றுமுன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்தனர்.

இவர்கள், இலங்கையின் மேலடுக்கு வளிமண்டலத்தில் ஏற்படும் குழப்பங்கள், மற்றும் மாற்றங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை விஞ்ஞானிகளுடன் இணைந்து. அமெரிக்க நிபுணர்கள், 10 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]