அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பாதிக்கப்படும் ஆசிய நாடுகள்

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பாதிக்கப்படும் ஆசிய நாடுகள்

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையால் ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதி மேலும் குறைவடையலாம் என ரொயிட்டஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது 21 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்காவின் பொருளாதார சேவைத்துறை வளர்ச்சியை காட்டுவதாக ரொயிட்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பானது ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இந்திய ரூபாவின் பெறுமதி பாரிய சரிவை எதிர்நோக்கியுள்ளதாகவும், இந்தியாவின் இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலையும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனவே மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு இந்திய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரொயிட்டஸ் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]