அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்!

2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக தமிழகத்தின் சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழ் வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்துள்ள கமலா ஹாரிஸ், 1990 ஆம் ஆண்டு அரசியலில் தீவிரமாக களமிறங்கினார்.

தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர், 2016ம் ஆண்டு செனட்டர் தேர்தலில் வெற்றிப்பெற்று கலிபோர்னியாவின் செனட்டராக பதவியில் இருக்கிறார்.

அமெரிக்காவில் அதிகம் விரும்பப்படும் செனட்டர்களில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார். நிற வெறிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர் கமலா. 2020 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது.

அக்கட்சியின் சார்பாக கமலா ஹாரிஸ் ஜனாதிபதி பதவிக்கு தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழ் வம்சாவளி பெண்ணான கமலா.

அதே சமயம் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பாக டிரம்பிற்கு பதில் வேறு ஒருவர் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது குறித்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெறுவதற்கான களப் பணிகளில் கமலா ஈடுபட்டு வருகிறார்.

மேலும் தேர்தல் பணிக்கு ஆயத்தமாகும் அனைத்து முயற்சிகளையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.

ஒருவேளை விடா முயற்சியால், 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு கமலா வெற்றிபெற்றால், முதல் அமெரிக்க பெண் ஜனாதிபதி என்ற பெருமைக்கு உரியவராவார்.

மட்டுமின்றி, இந்தியா வம்சாவளி மற்றும் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் என்பதால் முதல் கருப்பின பெண் ஜனாதிபதி எனவும் அறியப்பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]