அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் வைத்தியசாலை இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் வைத்தியசாலை கப்பல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அமெரிக்காவின் பசுபிக் ஒத்துழைப்பு ஒத்திகைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, இந்தக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது.

சான் -டியேகோவை தளமாக கொண்ட USNS Mercyஎன்ற மருத்துவமனைக் கப்பல் தற்போது மலேசியாவில் தரித்துள்ளது. அங்கிருந்து இந்தக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது.

2018ஆம் ஆண்டு அமெரிக்க மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நவாரண தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்காக ஆசிய-பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இரண்டு கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது.

இதற்கமைய பெப்ரவரி தொடக்கம் ஜூன் வரையான காலப்பகுதியில், USNS Mercy என்ற மருத்துவமனைக் கப்பல் இந்தோனேசியா, மலேசியா,இலங்கை,வியட்னாம் ஆகிய நாடுகளுக்கும், ருளுNளு குயடட சுiஎநச என்ற கப்பல், மலேசியா, பாலு, தாய்லாந்து, மைக்ரோனேசியாவில் உள்ள யாப் ஆகிய இடங்களுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளன.

தற்போது, USNS Mercyஎன்ற அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை அடுத்து இலங்கைக்குக்குப் பயணம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]