அமெரிக்க உயரதிகாரி – அமைச்சர்கள் சந்தித்து பேச்சு

அமெரிக்க உயரதிகாரி

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலாளர் டேனியல் ரொசென்பிளம் இலங்கை வந்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்ட டேனியல் ரொசென்பிளம், நேற்று முதல்முறையாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார்.

அவர் கொழும்பில் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். அமெரிக்க – இலங்கை ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்து இதன்போதே பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வெளிவிவகாரச் செயலாளர் பிரசாத் காரியவசம், மற்றும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரையும் சந்தித்து, இலங்கை- அமெரிக்க உறவுகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இலங்கை- அமெரிக்கா இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆவது ஆண்டு நிறைவுபெறும் நிலையிலும், முக்கியத்துவம் மிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ள நிலையிலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]