முகப்பு News Local News அமெரிக்க – இலங்கை கடற்படையினர் கூட்டுபயிற்சி

அமெரிக்க – இலங்கை கடற்படையினர் கூட்டுபயிற்சி

அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து திருகோணமலையில் கூட்டு பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி ஒத்திகை என்ற பெயரில், இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெற்று வருகிறது.

அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படையினருடன், சிறிலங்கா கடற்படையின் 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணி மற்றும், சிறப்பு படகு படையணி ஆகியவற்றைச் சேர்ந்த படையினர் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படையணி பயிற்சி பாடசாலையில் இந்த கூட்டுப் பயிற்சி ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயிற்சி மற்றும் தேவைப்பாடுகள் குறித்த பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் உடன்பாடுகளுக்கு கூட்டுப் பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

நிபுணத்துவ திறன் விருத்தி மற்றும் இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான ஆற்றலை பரிமாறிக் கொள்ளும் நோக்கிலான இந்த கூட்டுப் பயிற்சி நான்கு வாரங்களுக்கு நீடிக்கவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com