அமெரிக்கா 33 பில்லியன் இலங்கைக்கு மானியம்

கடந்த மூன்று வருடகாலப்பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு 33 பில்லியன் ரூபாவை ( 3300 கோடி ரூபா) மானிய உதவிகளாக வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவிக்கின்றது.

இதனை விட மேலதீகமாக இவ்வருடம் இடம்பெற்ற ஒரு மண்டலம் ஒரு பாதை மாநாட்டின் போது அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கு 44பில்லியன் ரூபாவை ( 4400 கோடி ரூபா) ஸ்ரீலங்காவிற்கு வழங்குவதற்கு சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் இணக்கம் தெரிவித்திருந்ததாக சீனத் தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துவெளியிட்டிருந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஸாப் இலங்கைக்கு மானிய உதவிகளை வழங்கும் நாடுகளின் வரிசையில் அமெரிக்காவே முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்ததுடன் 2016ம் ஆண்டில் 23. 83 மில்லியன் அமெரிக்க டொலர்களை (366 கோடி ரூபா) அதாவது இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த மானியங்களில் ( மீண்டும் திரும்பிக்கொடுக்க அவசியமற்ற நிதி) 44 சதவிகிதத்தை அமெரிக்கா வழங்கியதாக குறிப்பிட்டிருந்தார்.

மானிய உதவிகளை வழங்குவதில் ஜப்பான் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் ஏனைய அனைவரும் கடன் வழங்குநர்களே எனவும் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டிருந்ததார்.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்திடம் கேட்ட போதே அவர் இந்த விபரங்கள் தரப்பட்டன.

இந்தவகையில் அமெரிக்காவைவிடவும் பலமடங்கு அதிகமான மானியத்தை இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]