அமெரிக்காவை சாம்பலாக்கி இருண்ட கண்டம் ஆக்குவோம் – வட கொரியா

தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருக்கும் புதிய தடைகள் குறித்து கருத்து தெரிவித்த வட கொரிய அரசு நிறுவனம் அணுவாயுததால் ஜப்பானை மூழ்கடித்து அமெரிக்காவை சாம்பலாக்கி இருண்ட  கண்டம் ஆக்குவோம் – என்று  அச்சுறுத்தியது.

வட கொரியாவை சமாளிப்பதற்கு அண்மையில் ஐ.நா கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தடை நடவடிக்கை ஆகியவை பெரிதாக ஒன்றுமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜப்பான் வான்பரப்பில் ஏவுகணை சோதனைகள் தொடர்ந்து செப்டம்பர் 3 ம் தேதி இதுவரை அதன் மிக சக்தி வாய்ந்த அணு சோதனை நடத்தப்பட்ட பின்னர் பிராந்திய பதற்றம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் “இசைக்கு நடனம்” ஜப்பான் நடனமாடுவதாகவும், இதன் விளைவுகள் மிகவும் பாராதூரமாக இருக்கும் என ஜப்பானையும் கடுமையாக எச்சரித்துள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]