அமெரிக்கா பிரஜை ஒருவர் கிளிநொச்சியில் அடித்துக் கொலை!

அமெரிக்கா நாட்டின் தமிழ் பிரஜாவுரிமை பெற்ற ஒருவர் கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

கிளிநொச்சி கனகபுரம் செல்வாநகரை பிறப்பிடமாகக் கொண்ட 71 வயது இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க நாட்டின் பிராஜாவுரிமை பெற்றவர் எனவும் அவரது பிள்ளைகள் கனடாவில் வாழ்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த நபர் அவரது காணியில் அமைந்துள்ள வீட்டினைப் பார்வையிட வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவ்வாறு வந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]