அமெரிக்கா செல்லும் பயணிகள் இன்று முதல் தீவிர சோதனைக்கு ஆளாக்கப்படுவர்

அமெரிக்கா செல்லும் பயணிகள் இன்று முதல் தீவிர சோதனைக்கு ஆளாக்கப்படுவர்.

அமெரிக்கா செல்லும் பயணிகள் இன்று முதல் தீவிர சோதனைக்கு ஆளாக்கப்படுவர் என அந்நாட்டு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தப் புதிய விதிமுறைகள் மூலம் விமானப் பயணிகள் மடிகணினி எடுத்து செல்கின்றனரா என தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக எட்டு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த விமான பயணிகள் மடிகணினி உள்ளிட்ட மின்சாரப் பொருட்களை அமெரிக்காவுக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அமுலாகும் இந்த புதிய சட்டம், தினசரி 3 லட்சத்து 25,000 பயணிகளைச் சுமந்து செல்லும் சுமார் 2100 விமானங்கள், 280 விமான நிலையங்கள் என்பவற்றையும், 180 விமான சேவை நிறுவனங்களையும் பாதிக்கும் நிலை உருவாகும் எனவும் கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]