அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவரை கைது செய்ய உத்தரவு

‘அமெரிக்கா’வுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலியா விக்கிரமசூரியவை, கைது செய்யுமாறு, கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவர் தூதுவராகச் செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்துக்கான கட்டடமொன்றைக் கொள்வனவு செய்யும் பொருட்டு, 3 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க டொலரை முறையற்ற வகையில் கையாண்டதாக, அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.