அமெரிக்காவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

அமெரிக்காவின் மியாமியில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 8 கார்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக கட்டப்பட்ட அந்தப் பாலம் திடீரென சரிந்து விழுந்ததில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்கு கீழே சிக்கியுள்ள கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.