அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கின் பிரதிகள் கோத்தபாயவிடம் கையளிப்பு?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பிரீமியர் குரூப் இன்டர்நசனல் எனும் தனியார் நிறுவனத்தின் பணியாளர்கள் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்ததாக புகைப்படம் ஒன்றுடன் செய்தி வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள டிரேடர்ஸ் ஜோ வணிகவளாகத்திற்கு சென்று திரும்பும் போது குறித்த வழக்கு குறித்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]