அமெரிக்காவின் மைக்கேல் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு

அமெரிக்காவின் மைக்கேல் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு

அமெரிக்காவின் சில மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி புளோரிடா, விர்ஜினியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகப்படியாக புளோரிடாவில் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, விர்ஜினியாவில் 6 பேரும், வடக்கு கரோலினாவில் 3 பேரும், ஜார்ஜியா மாநிலத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

அவ்வகையில், கடந்த வாரம் புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் மணிக்கு சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை கடந்தபோது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

அங்கிருந்து மெல்ல நகர்ந்து விர்ஜினியா மாநிலத்துக்குள் நுழைந்த ‘மைக்கேல்’ புயல் அங்கும் பெரும் சேதம் உண்டாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]