அமெரிக்காவின் மைக்கேல் புயலில் சிக்கி 13 பேர் பலி

அமெரிக்காவின் மைக்கேல் புயலில் சிக்கி 13 பேர் பலி

அமெரிக்காவில் ஏற்பட்டு மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும, குறித்த புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் அதிசக்தி வாய்ந்த புயல் இது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து புயல் நிலப்பரப்புக்குள் பயணித்து வருவதாகவும், இதனால் இன்றும் பல பகுதிகளில் இதன் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்று குறித்த நிபுணர்கள் எச்சரிககை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் புயல் மையம் கொண்ட நிலையில், அந்த புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூடப்பட்டது.

இந்நிலையில் குறித்த புயலானது, புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்த நிலையில், நேற்று நள்ளிரவு அமெரிக்காவை புயல் தாக்கியுள்ளது.

முதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது.

இதனையடுத்து,மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியதாகவும், பலத்த மழையும் பெய்ததை தொடர்ந்து, சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்ததால், பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்ததை தொடர்ந்து சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அத்தோடு புயலின் தாக்கத்தால், லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும், இதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சூறை காற்றினால் பல வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு கூறி உள்ளது.

மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாகவும், புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளள்ளன.

அமெரிக்காவின் மைக்கேல் அமெரிக்காவின் மைக்கேல் அமெரிக்காவின் மைக்கேல் அமெரிக்காவின் மைக்கேல் அமெரிக்காவின் மைக்கேல் அமெரிக்காவின் மைக்கேல் அமெரிக்காவின் மைக்கேல்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]