அமெரிக்காவின் மரியானா தீவுகளில் நிலநடுக்கம்

அமெரிக்காவில் உள்ள மரியானா தீவுகளில் இன்று (புதன்கிழமை) நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது, 6.4 ரிக்டர் அளவுகோலாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளை அப்பகுதி மக்களுக்க உணர முடிந்ததாகவும், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும் சிறிது நேரத்தில் நிலைமை சீரானதோடு, இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]