அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்கும் நடவடிக்கை வெற்றி! கட்டுநாயக்கவில் கோத்தபாய தெரிவிப்பு

அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்கும் தனது ஆரம்ப நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளன என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

அமெரிக்கா சென்றிருந்த அவர், இன்று (12) வெள்ளிக்கிழமை முற்பகல் நாடு திரும்பினார். இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதற்கான விண்ணப்பத்தை அவர் கடந்த மார்ச் 6ஆம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜனாபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடவுள்ளார் என்று அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே அவர் தனது அமெரிக்க குடியுரிமையைத் துறக்க முயற்சிகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]