அமீர் அலி ஜிந்தோட்டை மற்றும் அதனை அன்மித்த பகுதிகளுக்கு விஜயம்

அமீர் அலி ஜிந்தோட்டை மற்றும் அதனை அன்மித்த பகுதிகளுக்கு விஜயம்

காலி மாவட்டத்தின் ஜிந்தோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதியில் (17) இடம்பெற்ற அசாதாரண நிலை பற்றி கண்டறிவதற்காக நேற்று (18) மாலை கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி நேரில் சென்று பார்வையிட்டார்.

காலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களில் இரண்டு இனங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.

அந்தப் பிரதேசத்தில் மக்களுடன் ஜிந்தோட்டை பள்ளிவாயலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துரையாடிய பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் சென்று பார்வையிட்டார்.

அத்துடன் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.

பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியுடன் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]