அமாவாசை பௌர்ணமிக்கு இடையே காதல்

அமாவாசை பௌர்ணமிக்கு இடையே காதல்.

143

ஐ டாக்கிஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் திரைப்படம் “143”

“I LOVE YOU” என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 ஆகும்.

அமாவாசை அன்று பிறந்த நாயகனுக்கும், பெளர்ணமி அன்று பிறந்த நாயகிக்கும் இடையே காதலை சொல்லும் திரைப்படமே “143”

இந்த தலைப்பை இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப்படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான்.

அனால் அந்த தலைப்பை பயன்படுத்திக் கொண்டார் இயக்குனர் ரிஷி.

143

இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் ரிஷியே கதாநாயகனாக நடித்து எழுதி இயக்கி இருக்கிறார்.

கதாநாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நடிகர்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்கள்.

மேலும் சுதா, ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன், நெல்லைசிவா இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.

இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் ரிஷி கூறும்போது, “காதல், காமெடி, பேமிலி சென்டிமென்ட் கலந்த ஒரு கலவைதான் இந்த 143. இது ஒரு காதல் கதை.கிராமத்து பின்னணியிலும், நகரத்து பின்னணியிலும் திரைக்கதை நகரும். எனக்கு அப்பாவாக விஜயகுமார் நடித்திருக்கிறார். அந்த அப்பா சென்டிமென்ட் காட்சிகள் அனைத்து இளைஞர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.” என்கிறார்.

“143” திரைப்படமானது இம்மாதம் 10ம் திகதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]