இயக்குனர் ஏ.எல்.விஜயும் நடிகை அமலா பாலும் காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை 3 ஆண்டுகளிலே விவகாரத்தில் முடிந்தது.
இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது 27 வயதான அமலா பால் தனது இரண்டாவது திருமணத்திற்கு தயார் ஆகிறர் என செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து கூறிய அமலா பால் என் முடிவில் நடைப்பெற்ற முதல் திருமணம் சரியாக அமையவில்லை. ஆகையால், எனது இரண்டாவது திருமணம் பற்றி முடிவெடுப்பதை எனது தாய் தந்தையின் முடிவுக்கே விட்டுவிட்டேன்.
தனது பிள்ளைக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு இல்லாத அக்கறையா? ஆகையால், அவர்கள் சொல்லும் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன்என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இவர் யாரை திருமணம் செய்ய போகிறார் என்பது தெரியாத நிலையில் ஓர் ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனால் அந்த புகைப்படத்தில் இருப்பவரை தான் நடிகை அமலா பால் இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்றும் பேசப்படுகிறது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]