நடிப்பு என்ற கலையில் அழகு எனும் வரத்தை இணைத்துத் திரைத்துறையில் காலூன்றி ரசிகர்களைக் கவர்ந்து வெற்றி பெற்ற கதாநாயகிகள் வெகு சிலரே. அவர்களில் முன்னணியில் திகழும் கதாநாயகிகளில் ஒருவர் அமலாபால்.

அமலாபால்

சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட “ஹெப்புலி” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அனைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்தத் திரைப்படம் 100 கோடிகளை வசூலித்து 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் 100 கோடிகள் வசூலித்த படங்களின் நடித்த நடிகைகளின் கிளப்பில் நடிகை அமலா பாலும் இணைந்துள்ளார்.

அமலாபால்

1.சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாகத் தயாரிக்கப்படும் “வேலையில்லா பட்டதாரி 2” படத்தில் தனுஷ் ஜோடியாக முக்கிய வேடம்.
2.ஏ.ஜி.எஸ் எண்டர்டெயன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகும் “திருட்டு பயலே” படத்தில் சிம்மா மற்றும் பிரசன்னா இருவருக்கும் போட்டி போடும் வகையில் மிகுந்த சவாலான வேடம்.
3. ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் முண்டாசுப்பட்டி இயக்கிய ராம் இயக்கும் “மின்மினி” படத்தில் விஷ்ணு விஷாலுக்குக் கதாநாயகியாக முக்கிய வேடம்.

4. தயாரிப்பாளர் முருகன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகி வேடம்.
5.செண்சுரியன் பிலிம்ஸ் திரு.ஜோன்ஸ் மற்றும் ஷாலோம் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகி வேடம்.
6. பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் மளையாள பதிப்பில், ரேவதி இயக்கத்தில் கதாநாயகி வேடம்.
7. கண்ணன் இயக்கத்தில் உருவாகும் “அச்சாயன்ஸ்” மளையாளம் படத்தில் முக்கிய வேடம்.
8. அனூப் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரில்லர் படத்தில் முக்கிய வேடம்என இவர் நடிக்கும் படங்களின் வரிசை நீண்டு கொண்டே போகிறது.

அமலாபால்

முன்னனி கதாநாயகியாகத் திகழ்ந்தாலும் தனது அமைதியான அமர்க்களமில்லாத சுபாவத்தால் நடிகை அமலாபால் பெருவாரியான தயாரிப்பாளர்களின் அபிமானக் கதாநாயகியாகத் திகழ்கிறார். ஒவ்வோரு படத்திலும் தான் நடிக்கும் கதாபாத்திரம் வித்தியாசமும் நடிப்பு திறமையை மெருகேற்றும் வாய்ப்பும் அளிப்பது மிகுந்த உற்சாகம் தருகிறது என்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]