அமர்ந்த வண்ணம் இறந்தவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரை பகுதியில் 41வயதுடைய ஆணொருவரின் சடலம் இன்று (09) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

தேற்றாத்தீவு கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 41 வயதுடைய சுப்பிரமணியம் குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வெளிநாட்டு மற்றும் விமான பிரையாணசீட்டு முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வரும் இவர், சம்பவதினமான இன்று காலை தான் தற்கொலை செய்யப் போவதாக வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மனைவி, பிள்ளைகளுக்கு தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் மேசையில் கடிதம் ஒன்று இருப்பதை கண்டு அதனை வாசித்த பின் அரின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த முயற்சித்த போது அது இயங்கவில்லை.

இதனையடுத்து இவரை தேடி மனைவி கடைக்கு சென்றபோது அவர் அங்கு வரவில்லை என தெரிய வந்துள்ளது.

தொடர்ச்சியாக நடந்த தேடுதலில் அவர் கடற்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் அருகில் கையடக்க தொலைபேசி மற்றும் அவரின் பணப்பை என்பன மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]