அமரி விஜேவர்தன இராஜினாமா செய்யவில்லை

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தியை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது.

மார்ச் 31ஆம் திகதியுடன் அவர் தனது சொந்த விருப்பத்துக்கமைய தனது ஒப்பந்தத்தை நிறைவு செய்துகொள்வார் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன தனது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தகவல் வெளியானது.

அவரின் இராஜினாமாகடிதத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவித்தன.

அதனையடுத்து, பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றுபவர் பதில் உயர் ஸ்தானிகராக செயற்படுவார் என்று வெளிவிவகா அமைச்சு கூறியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

எனினும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதனை இன்று பிற்பகல் மறுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]