அமரர் அஸ்லி நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நிகழ்வு

அமரர் அஸ்லி நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் முதண்மைப் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அஸ்லி நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நிகழ்வு நாளை (19) ஞாயற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு முறக்கொட்டான்சேனை தேவபுரம் இலங்கை கிறிஸ்தவ சமுக மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்றுத் தெற்குப் பிரதேசக் கிளைகளின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் அறிமுகவுரையினை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆற்றுவதோடு, நினைவுச் சொற்பொழிவினை “புதிய அரசியல் அமைப்பும், தமிழர் அரசியலும்” எனும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ம.அ. சுமந்திரன் ஆற்றவுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அஸ்லி நிமலன் சௌந்தரநாயகம் அவர்கள் 2000.11.07ம் திகதி கிரான் பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]