அப்பாவின் மருத்துவச் செலவுக்கு நடிகர் விஜய் தான் நிதியுதவி செய்தார் – தாடிபாலாஜி!!

உறவினர்கள் கூட முன்வராத நிலையில் என் அப்பாவின் மருத்துவச் செலவுக்கு நடிகர் விஜய் தான் நிதியுதவி செய்தார் என்று காமெடி நடிகர் தாடிபாலாஜி கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடிக்க வந்த நாள் முதல் தன்னால் முடிந்த உதவிகளை விளம்பரம் இல்லாமல் மற்றவர்களுக்கு செய்து வருகிறார். இந்தநிலையில் காமெடி நடிகர் தாடி பாலாஜி அளித்த பேட்டி ஒன்றில் ‘‘விஜய் அவர்களுக்கு உதவும் குணம் அதிகம். அவருடன் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போது என் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. இந்த தகவலை எப்படியோ தெரிந்து கொண்ட விஜய், என்னை அழைத்து நீங்கள் உடனே போய் அப்பாவை பாருங்கள் என்று கூறினார்.

உடனே விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்தார். இன்று வரை அந்த பணத்தை திருப்பி கேட்கவில்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் விஜய் உதவி செய்துள்ளார். உறவினர்கூட உதவி செய்ய முன்வராத நிலையில் விஜய் உதவி செய்தது எனக்கு பெரிய விஷயம்’’ என்றார்.