அப்பாவாகிறார் அஞ்சேலோ மத்தியூஸ்

அப்பாவாகிறார் அஞ்சேலோ மத்தியூஸ்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், சகலதுறை வீரருமான அஞ்சேலோ மத்தியூஸ்சின் மனைவி குழந்தைப் பாக்கியத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

29  வயதான மத்தியூஸ் மற்றும் ஹேசானி தம்பதியருக்கு மார்ச் மாதமளவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கான அட்டவனையில் ஏப்ரல் மாதம் வரையில் கடுமையான நெருக்கடியான போட்டிகள் கொண்ட காலகட்டமாக இருக்கும் நிலையில், மத்தியுஸின் வாரிசு வருவதும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.

அஞ்சேலோ மத்தியூஸ்,ஹேஷானி தம்பதியினர்  2013  இல் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.