அபிவிருத்திகளில் ஒத்துழைக்கவேணடும். – பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா

கல்வித்திணைக்களத்தினர் கல்வித்துறைசார்ந்து பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பது மிகவும் முக்கியமானது என தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாட்டு மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளபபட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள்தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாட்டு மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மேலும் கருத்து; தெரிவித்த அவர்,

தேசிய நல்லிணககம் மற்றும் ஒருமைபாடு சார்ந்து பல்வேறு வேலைத்திட்டங்களை எமது அமைச்சு முன்னெடுத்து வருகிறது. விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிக கரிசனையைச் செலுத்தும் வகையிலான திட்டங்கள் எமது அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய நல்லிணக்கத்தினைக்கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பதன் மூலம் நாட்டினை மென் மேலும் முன்நோக்கி கொண்டு செலல முடியும்.

அபிவிருத்திகளில்

அபிவிருத்திகளில்

படசாலைகள், மற்றும் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் அப்விருத்திதிட்டங்கள் தொர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்த வண்ண்மிருக்கினறன. எனவே கல்விததிணைக்கள அதிகாரிகள் அபிவிருத்தித்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். என்பதுடன் மாவட் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஆதரவுகளை வழங்கவும் வெண்டும் எனத் தெரிவித்தார்.

இன்றைய முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள், அமைச்சுகளின் ஒதுக்கீடுகள், ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டங்கள் ஊடாக நிதிகள் வழங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார மேமபாட்டு வேலைத்திட்டங்கள தொடர்பில் ஆராணப்பட்டது.

இதில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.ஜெகதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]