அபியும் அனுவும் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் அழியாத காதல் கதையாகும்

அபியும் அனுவும் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் அழியாத காதல் கதையாகும்.அபியும் அனுவும்

சினிமாவில் என்றுமே அழியாததும், அழிக்கமுடியாததும் காதல் கதைகளே. காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. பல ஸ்டார்களும் சூப்பர் ஸ்டார்களும் காதல் கதைகள் மூலமாக பிறந்து வளர்ந்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளுக்கும் காதல் காவியங்களும் பஞ்சம் இருந்ததேயில்லை.அபியும் அனுவும்

தற்பொழுது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ‘அபியும் அனுவும்’ இப்பட்டியலில் சேர முனைப்போடுள்ளது . இப்படத்தில் மலையாள திரை உலகில் துரித வேகத்தில் வளர்ந்து வரும் நாயகன் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை B R விஜயலக்ஷ்மி இயக்கியுள்ளார்.அபியும் அனுவும்

‘அபியும் அணுவும்’ படத்தை குறித்து அதன் இயக்குனர் B R விஜயலக்ஷ்மி பேசுகையில், ” இது ஒரு புதுமையான, இது வரை சொல்லப்படாத கதை. இதே போல் பல இயக்குனர்கள் முன்பு கூறியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அனால் இது அது போல் கிடையாது. இது எவ்வளவு புதுமையான கதை என்பதை இப்படம் ரிலீசாகம்பொழுது ரசிகர்கள் அறிவார்கள். மலையாள சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் டோவினோ தாமஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கால் பதிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார்.அபியும் அனுவும்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான மற்றும் துணிச்சலான படமாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காதலை இப்படத்தில் கையாண்டுள்ளோம். படத்தில் இருக்கும் அதிரடிகளை மேலும் உடைக்காமல், இது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும் ஒரு உணர்வுப்பூரமான காதல் கதையாக இருக்கும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.அபியும் அனுவும்

சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து post production பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ரிலீசுக்கான தகுந்த தேதியை முடிவு செய்யவுள்ளோம்.” இப்படத்தை ‘ச ரி க ம India Limited’ நிறுவனத்தின் சினிமா பேனரான ‘Yodlee films’ தயாரித்துள்ளது.அபியும் அனுவும்

தரனின் இசையில், அகிலனின் ஒளிப்பதிவில், உதயபானு மகேஸ்வரனின் கதை மற்றும் திரைக்கதையில், சுனில் ஸ்ரீ நாயரின் படத்தொகுப்பு மற்றும் மதன் கார்க்கியின் பாடல் வரிகளில் ‘அபியும் அனுவும்’ உருவாகியுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]