அபர்ணதியை ரகசிய திருமணம் செய்துக்கொண்ட ஆர்யா??

ஆர்யாவின் எங்க வீடு மாப்பிளை ஒருவாறாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இறுதிப்போட்டியில் மூன்று பெண்கள் பங்குபற்றினர். சூசனா, அகதா, சீதா லட்சுமி இப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

இறுதிப்போட்டியில் ஆர்யாவின் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இதனால் போட்டியாளர்களின் பெற்றோர் பெரும் அதிருப்தியில் காணப்பட்டனர். சுசானாவின் அப்பா நேரடியாகவே ஆர்யாவை திட்டியிருந்தார்.

தமிழ்நாடு மக்கள் கூட நிகழ்ச்சியை திட்டித்தீர்த்து வந்தனர். மக்களை ஏமாற்றும் முயற்சியில் இந்நிகழ்ச்சியை நடாத்திய சேனலை உடனடியாக நிறுத்த சொல்லி வந்தனர்.

இது இவ்வாறிருக்க, ஆர்யாவின் முடிவால் அபர்ணதி மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். இறுதிப்போட்டியில் கலந்து கொண்டிருந்த போதே ‘இப்ப கூட நன் இருக்கன் உனக்காக’ ‘ஐ லவ் யு Bariya’ என்று சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் அபர்ணதி.

ஆர்யா கூட அபர்ணதியின் எலிமினேஷனின் பின்னர் அவ்வளவாக சந்தோசமாக இருக்க முடியவில்லை என்று முதலில் கூறியிருந்தார்.
எனவே ஆர்யா அபர்ணதியை திருமணம் செய்வதற்காக போட்ட நாடகமாக கூட இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எது எப்படியோ, ஆர்யா அபர்ணதி ஜோடி சூப்பர் தான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]