அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை

பதவியேற்றப்பின்னர் சொத்து விவரங்களை வௌியிடாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்தக் குற்றத்துக்கான இதுவரை அறவிடப்பட்ட 1000 ரூபாய் அபராத தொகையை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

அபராத தொகையில் திருத்தம் மேற்கொள்வதற்கான பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.