‘அன்னை பூபதி’யின் நினைவுதினம் யாழ் பல்கலையில் அனுஸ்டிக்கப்பட்டது

அன்னை பூபதி

யாழ் பல்கலையில், சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு உயிர் நீத்த ‘அன்னை பூபதி’யின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று (19) பல்கலைக்கழக வளாகத்தில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினார்கள்.

அஞ்சலி நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன் கலந்துகொண்டு, பூபதி அம்மாவின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், பொது ஈகைச்சுடரினையும் ஏற்றிஅ ஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அமைதிப் படை என்ற பெயரில் எம்மண்ணை ஆக்கிரமித்த இந்திய இராணுவத்திற்கெதிரான போh நிறுத்தத்தினை அமுல்படுத்துமாறும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறும் கோரி மட்டக்களப்பில் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுத்து அன்னை பூபதி அம்மா உயிர்நீத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அன்னை பூபதிஅன்னை பூபதி அன்னை பூபதி அன்னை பூபதி அன்னை பூபதி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]