அன்னை தெரேசா நோபல் பரிசு பெற்ற 21 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு

அன்னை தெரேசா, நோபல் பரிசு பெற்ற 21 ஆவது நினைவு நாள் இன்று (புதன்கிழமை) சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், கொல்கத்தா நகரில் உள்ள மிஷனரீஸ் சந்நியாசிகள் தொண்டு நிறுவனத்தில், இந்த நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதோடு, அவரின் சேவைகளும் நினைவுகூரப்பட்டுள்ளது.

அன்னை தெரேசாவின் சேவைகளும் நினைவுகூரும் முகமாக குறித்த நிலையத்தின் தொண்டர்கள் ஒன்று கூடி, தீபமேற்றி மரியாதை செலுத்தியுள்ளனர்.

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்பதற்கேற்ப அன்பால் இந்த உலகை வசப்படுத்திய பெண்மணி வேறு யாருமல்ல புனிதர் அன்னை தெரசா அவர்கள்தான்.

1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் திகதி பிறந்த அன்னை தெரேசா கடந்தகால வரலாற்றில் மறக்கப்படமுடியாத பெண் ஆவார்.

ஏழைகள் மற்றும் அநாதைகளுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் வாழ்ந்த இவர், தனது 87 ஆவது வயதில் செப்டெம்பர் 5 ஆம் திகதி 1997 ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னை தெரேசா அன்னை தெரேசா அன்னை தெரேசா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]