அனைவரும் ஒன்றுபட்டு நிற்கும் வகையில் இந்த நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும்

அனைவரும் ஒன்றுபட்டு நிற்கும் வகையில் இந்த நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும்

அனைவரும் ஒன்றுபட்டு

இந்த நாட்டில் உள்ள அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கும் வகையில் இந்த நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்கம் ரட்னம் விளையாட்டுக்கழகம் தனது 23வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு சனிக்கிழமை (18) மாலை நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அனைவரும் ஒன்றுபட்டு

இங்குள்ள இனப்பிரச்சினையை யாரும் தங்களது சுயநல அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டில் உள்ள மூவின மக்களும் சந்தோசமாக சமத்துவமாக வாழ்வதற்கு இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.அந்த தீர்வு என்பது இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமத்துவமானதாக இருக்கவேண்டும்.

எவரும் இரண்டாம் தர பிரஜைகளாக இருக்ககூடாது. ஒருஇனத்தினைக்கண்டு இன்னுமொரு இனம் அச்சம்கொள்ளும் நிலையில்லாமல் அனைவரும் சகோதரர்கள் என்ற ரீதியில் இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் ஒற்றுமையாக செயற்படக்கூடிய வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும்.

இதனை தங்களது சுயநல அரசியலுக்காக யாரும் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. இனமோ தல்கள், இனப்பகைகள் இல்லாமல் அனைவரும் சமத்துவமாக முன்னைய காலத்தில் இருந்த ஐக்கியத்துடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் விட்டுக்கொடுப்புகளை செய்துவருகின்றார்.

இந்த ஆண்டில் புதிய அரசியல்யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அந்த யாப்பின் ஊடாக சகல மக்களும் அச்சமின்ற உரிமையுடன் வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும். அனைத்து மக்களும் சுயநிர்ணய உரிமையினை நிலை நாட்டி உரிமையினை பகிர்ந்து வாழும் நிலையேற்ப்படுத்தப்படவேண்டும்.

சுவிஸ் போன்ற நாடுகளில் பல இனங்கள், பல மதங்கள் இருக்கின்றபோதிலும் அனைத்து இன மக்களும் மத மக்களும் சந்தோசமாக ஜனநாயக உரிமையுடன் வாழுகின்றனர். அதேபோன்றதொரு சூழல் இலங்கையிலும் ஏற்படுத்தப்படவேண்டும்.

சகல மக்களும் சுயமரியாதையுடன் தங்களது கௌரவத்தினை பேணிக்கொண்டு ஐக்கியமாக வாழும் நிலையினை புதிய அரசியல்யாப்பு ஏற்படுத்தவேண்டும். இந்த அரசியல்யாப்பினை குழப்பியடிக்கும் வகையில் சிலர் செயற்பட்டுவருகினறனர்.

அண்மையில் பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் சிந்திக்ககூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பல கருத்துகளை தெரிவித்தார். இந்த நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள சமாதானத்தை குழப்பாமல் அனைத்து இன மக்களும் உரிமையுடன் வாழும் நிலைக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு உதவுமாறும் எந்த அரசியல்நோக்கத்திற்காகவும் உருவாகும் அரசியல்யாப்பினை குழப்பிவிடவேண்டாம் எனவும் கோரியிருந்தார்.

எனினும் அதனைக்கேட்டுக்கொண்டிருந்த மகிந்தராஜபக்ஸ உணர்வுபூர்வமான உரையினை செவிமடுத்ததாக கூறியிருந்தார். ஆனால் தனது உரையில் அதற்கான பதிலைகூறவில்லை. அதற்கு காரணம் நியாயமான கருத்துகளுக்கு எதிரான எந்த கருத்தினையும் முன்வைக்கமுடியாத நிலையிலேயே அமைதியாக இருந்து தனது வரவுசெலவுத்திட்ட உரையினை முடித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்திற்காக நாங்கள் தகுதியான மூன்று பேரை பரிந்துரைத்திருந்தோம். இருந்தபோதிலும் நாங்கள் நினைப்பது வேறு கடவுள் நினைப்பதுவேறு.

நாங்கள் நினைப்பதும் சிலவேளைகளில் சரியாக வரலாம். கடவுள் நினைப்பதும் சரியாகவரலாம். கடவுளின் சித்தம் என்பது அனைத்தையும் விட வல்லமையானது. அந்த அடிப்படையில் மூன்று பேரின் பெயரை வழங்கியிருந்தோம். அதில் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மூன்று பேருக்கும் நாங்கள் சமமான சந்தர்ப்பத்தினை வழங்கியிருந்தோம். அதில் இருந்து அவர்கள் ஒருவரை தெரிவுசெய்து எடுத்துள்ளனர்.

முன்னாள் அரசாங்க அதிபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. பல நிதி துஸ்பிரயோகங்கள் பற்றியும் கூறப்பட்டிருந்தன. மக்களுக்கு கிடைக்கும் வளங்கள் எந்தவகையிலும் துஸ்பிரயோகம் செய்யப்படக்கூடாது. முழுமையாக மக்களுக்கு சென்றடையவேண்டும் என்பதற்காகவே முன்னாள் அரசாங்க அதிபர் தொடர்பில் நாங்கள் கருத்துகளை அவ்வப்போது முன்வைத்திருந்தோம்.

நாங்கள் எந்த நெருக்குவாரங்களையும் செலுத்தாமல் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்ததும் அவர் இடமாற்றம்பெற்று சென்றுள்ளார். இனிவரும் அரசாங்க அதிபர்கள் மக்கள் பக்கம் இருந்து நியாயமாக நடுநிலையாக சகல இனத்தவர்களுடனும் உடன்பாட்டு சிந்தனையுடன் செயற்பட்டு சகலருக்கும் பணியாற்றும் நிலையேற்படுத்தப்படவேண்டும்.

அனைவரும் ஒன்றுபட்டுஅனைவரும் ஒன்றுபட்டுஅனைவரும் ஒன்றுபட்டுஅனைவரும் ஒன்றுபட்டுஅனைவரும் ஒன்றுபட்டுஅனைவரும் ஒன்றுபட்டு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]