அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகளை எதிர்வரும் 13 ,14ஆம் திகதிகளிலும் வெசாக் தினத்தை முன்னிட்டு 29, 30 ஆம் திகதிகளிலும் மூடுவதற்கு அரசு கட்டாய அறிவித்தலை விடுத்துள்ளது.

மேலும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் குற்றங்கள் மற்றும் மதுபான விற்பனைக்கு உரிமம் பெற்ற இடங்களில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு வேலைத் திட்டமொன்றை மதுவரித் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது.

மேலும், முறை கேடாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்ய 011 204 5077 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 011 287 7882 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மதுவரித் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]