அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினருக்கு விளக்கமறியல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினரான ஆத்மா பிரியதர்ஷன என்ற மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.

2015ஆம் ஆண்டு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆத்மா பிரியதர்ஷன உட்பட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் 06 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குருந்துவத்தை பொலிஸாரால் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் ஆத்மா பிரியதர்ஷன இரண்டு வழக்குத் தவணைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை இரத்து செய்த கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.