அனைத்து பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களின் சங்கம் வேலை வேலைநிறுத்தம்

அனைத்து பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களின் சங்கம் வேலை வேலைநிறுத்தம்

‘2018 பெப்ரவரி 28ம் திகதிமுதல் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் சமயாசமய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் 2018 பெப்ரவரி 28ம் திகதிமுதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களால் 2016.07.27 முதல் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் தங்களால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உடன்பாட்டுக் கடிதத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

மேற்கண்ட உடன்பாட்டிற்கு இசைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை என்பவற்றோடு அப்பதவிகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளில் காணப்படும் சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்யும்படி எம்மால் வழங்கப்பட்ட அழுத்தத்தை கவனத்திற் கொள்ளாத தன்மையைக் காணமுடிகின்றது.

எனவே, அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைந்த குழுவின் 2018 பெப்ரவரி 6ம் திகதி இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் முடிவில் பின்வரும் முடிவு எடுக்கப்பட்டது.

எவற்றுக்கும் முடிவு கிடைக்காத நிலையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]