அனைத்து சாதனைகளையும் முறியடித்த ஸ்பைடர்

மகேஷ் பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வந்த படம் ஸ்பைடர். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் சந்தித்து வருகின்றது.

ஆனால், இப்படம் முதல் நாள் மட்டுமே ரூ 51 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்துவிட்டது, இதில் தமிழில் மட்டும் ரூ 4 கோடியை எட்டியுள்ளதாம்.

மேலும், சென்னையில் இரண்டு நாட்களில் ரூ 1.2 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, ஆம், ஒரு தெலுங்கு நடிகரின் படத்திற்கு இத்தகைய வரவேற்பு சாதனை தான்.

இன்னும் 4 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் கண்டிப்பாக ஸ்பைடர் ரூ 150 கோடி கிளப்பில் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.