அனைத்து சகோதர சகோதரிகளின் முக்கிய கவனத்திற்கு- தப்பி தவறி கூட இதைமட்டும் செய்திடாதீங்க…

1) ஆணோ, பெண்ணோ முகநூலில் தேவை இல்லாமல் குடும்பத்தினரின் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்.

2) தெரியாத நபர்களின் புகைப்படத்திற்கு Like, Comment, Share பண்ண வேண்டாம்.

3) ஆணோ, பெண்ணோ தெரியாத நபரிடம் தேவை இல்லாமல் சாட் செய்ய வேண்டாம். பிரச்சினையின் ஆரம்பமே இங்குதான்.

4) யாரை நம்பியும் புகைப்படத்தை அனுப்ப வேண்டாம். யாரிடமும் நீங்கள் புகைப்படத்தை கேட்கவும் வேண்டாம்.

5) நீங்கள் புகைப்படம் அனுப்பும் நபர் உங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும், அவரது கவன குறைவின் காரணமாக அவரிடம் இருந்து உங்கள் புகைப்படம் கயவர்கள் கையில் செல்ல வாய்ப்பு உண்டு என்பதனை மறந்து விட வேண்டாம்.

6) யாரும் உங்களை மிரட்டினால் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப் படுத்துங்கள்.

7) ஆண்கள், பெண்கள் பெயரில் போலியாக ID உருவாக்கி, ஆண்களையும், பெண்களையும் ஏமாற்றலாம்.

8) முகநூலில் உங்கள் தொலைபேசி எண், மின் அஞ்சல், பிறந்த தேதி மற்றும் சொந்த ஊர், படித்த கல்லூரி போன்ற தகவல்களை பிறர் பார்ப்பதை போதுமான வரை தவிர்க்கவும்.

9) சமூக வலைத்தளங்களில் உறவு முறைகளை வைத்து தெரியாதவரிடம் பழகுவதை கூடுமான வரை தவிருங்கள். எங்கும் ஒரு இடை வெளி வைத்து கொள்ளுங்கள்.

10) தெரியாதவரிடம், உங்களது அந்தரங்க விஷயங்களை, குடும்ப பிரச்சினைகளை கூறாதீர்கள், அதே போல் அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள்.

11) ஆபாச புகைப்படங்களை கொண்ட இணைப்புகள் வந்தால் அதனுள் போக வேண்டாம். அவ்வாறு சென்றால் அந்த இணைப்பு உங்களின் நண்பர்களுக்கு உங்கள் பெயரில் சென்று உங்களின் நன் மதிப்பு கெடும்.

12) உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களின் பெயரில் தேவை இல்லாத பதிவோ அல்லது செய்தியோ வந்தால் அவரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்.

13) இத்தகைய தொழில் நுட்பங்களை உங்களின் முன்னேற்றத்திற்கு மட்டும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

14) Facebook ,what’s app Hack பண்ணுவது மிக மிக எளிது. உங்க mobile நீங்க lock பண்ணிருந்தாலும் hack பண்ணலாம்.

15) *free recharge னு* லிங்க் வந்தால் அதில் போகாதீர்கள் சுலபமாக உங்களுடைய அனைத்து டாட்டா,புகைப்படங்கள்அவர்களுக்கு போய்விடும்.

16) உங்க mobile memory space இருந்தும் நீங்க 3g,4g network .இருந்தும் உங்க மொபைல் டக்குனு சூடு ஆனால்,ஹாங் ஆனாலோ உங்க தரவுகளை யாரோ திருடுறாங்கனு அர்த்தம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]