அனைத்தும் பொய்! என் மகன் ஒரு வீடியோவிலாவது இருக்கின்றனா? திருநாவுக்காரசின் தாய் பேட்டி!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முகநூல் மூலம் நட்பாக பழகி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வந்து மிரட்டி வந்த கும்பல் பிடிப்பட்டதை அடுத்து இந்த வழக்கு தொடர்பான பல உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்காரசின் தாய் பிரபல ஊடகம் ஒன்றிற்கு “தனது மகன் எந்த தப்பும் செய்யவில்லை” என்று பேட்டியளித்துள்ளார்.

குறித்த பேட்டியில் திருநாவுக்காரசின் தாயார் கூறுவதாவது, என் மகன் காரின் வரும் விபத்துக்குள்ளாகி தலையில் அடிப்பட்டு 3 மாதங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தான்.

“நான் ஒன்னும் தப்பானவ கிடையாது, என் மகனை நான் தப்பானவான வளர்க்கவில்லலை, எல்லோரும் பளிபோட்டு 8 நாட்கள் வைத்து இருந்து அடித்து செல்போனின் வீடியோ ஏத்தி என் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என நினைத்து இதை செய்துள்ளார்கள்.

மேலும் வீடியோவில் இருப்பது அனைத்து பொய், என் மகன் வீடியோவில் ஒரு வீடியோவிலாவது இருக்கின்றனா?பரமகுரு என்பவர் ஆள் வைத்து பணம் கொடுத்து ரோட்டில் திரியும் வேறு ஒரு பெண்ணை கூட்டி வந்து வீடியோவில் பேச வைத்துள்ளார்கள். இது அனைத்துமே பொய்.

எனது உயிருக்கும் என் கணவன் உயிருக்கும் எனது மகள்கள் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். என் பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிட்டது என்றால் நானும் மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலை பண்ணிவிடுவேன் ”என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

மேலும் இது அரசியல்வாதிகளில் சாதியாக இருக்கும் என திருநாவுக்கரசின் அம்மா கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]