அனுஷ்காவை திருமணம் செய்யும் எண்ணமில்லை…

பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது.

அனுஷ்காவை திருமணம்

தற்போது பிரபாசுக்கு 38 வயதாகிறது. எனவே அவரது திருமணம் பற்றிய வதந்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. ‘பாகுபலி’ படத்தில் நடித்தபோது பிரபாசுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின. இந்த தகவலை இருவருமே மறுக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் காதல் இருப்பது உண்மை என்று பலரும் நம்பினர்.

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் தனது திருமணம் தொடர்பாக முதன் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பாக ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அனுஷ்காவை திருமணம்

தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. இதனால் எனது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என நினைக்கிறேன்.

திருமணம் குறித்து நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் ஊடகங்கள் என்னையும், என்னுடன் சேர்ந்து நடித்த ஒரு நடிகையையும் (அனுஷ்கா) இணைத்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லை.

அனுஷ்காவை திருமணம்

தொடக்கத்தில் இது போன்ற செய்திகள் வந்தால் மிகவும் மனம் வருந்துவேன். இப்போது பழகி விட்டது. 2 படங்களில் நாங்கள் தொடர்ந்து சேர்ந்து நடித்ததால் மக்களும், ஊடகங்களும் தவறாக புரிந்து கொள்கின்றன. தற்போது என்னுடைய முழு கவனமும் ‘சாஹோ’ படத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]