அனுஷ்காவை கைவிட்டு பாலிவுட் நடிகையுடன் கைகோர்த்தாரா பிரபாஸ்

‘பாகுபலி-2’ க்கு பிறகு பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் ‘சாஹோ’. இது தமிழ்,தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன் நாயகியாக அனுஷ்கா நடிக்கப் போவதாக முதலில் செய்தி வெளியானது. பின்னர் அவர் கால்ஷீட் இல்லாததால் இதில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

அனுஷ்காவை கைவிட்டு

தமன்னா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இவர்கள் இருவரும் நடிக்கவில்லை. இந்தி பட முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று படக்குழு தெரிவித்தது.

இதையடுத்து கத்ரீனா கைப்,‌ ஷரத்தா கபூர், திஷாபதானி, பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்தது. இதில், ‌ஷரத்தாகபூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதன் மூலம் பிரபாஸ் ஜோடியாக நடிப்பதாக சொல்லப்பட்ட அனுஷ்காவுக்கு பதில் ‌ஷரத்தா கபூர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர இந்த படத்தில் வில்லனாக இந்தி நடிகர் நீல் நிதின் நடிப்பதும் தெரியவந்துள்ளது.